இலவச கண் சிகிச்சை முகாம்

தேவிபட்டினம் : ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் தேவிபட்டினம் புகாரியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. பாதிப்புள்ளோர் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பள்ளியின் முதல்வரும், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புரவலருமான தேவி, மாவட்ட செயலாளர் ரமேஷ், சேர்மன் சுந்தரம், பொருளாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் பாலமுருகன், ஜீவா, இஷாந்த் கான் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணன் கோயில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

Advertisement