விளைச்சல் குறைந்ததால்இளநீர் விலை கிடுகிடு

காங்கேயம்:திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தென்னை சாகுபடியானது, விவசாயிகளால் தனி பயிராக சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் தேங்காய் உற்பத்தி திறன் குறைவால், கொப்பரை மற்றும் தேங்காய் பருப்பு விலை ஏற்றம் அடைந்துள்ளது. தற்போது வெப்ப தாக்குதல் அதிகரிப்பால், உடல் உஷ்ணத்தை குறைக்க மக்கள் இளநீரை அதிகளவில் பருகுகின்றனர். இந்நிலையில் விளைச்சல் சரிந்து, வரத்து குறைந்ததால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காங்கேயம் பகுதியில், இளநீர் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு இளநீர், 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்றது. தற்போது 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.


Advertisement