கம்பராயப் பெருமாள் கோயில் ஆனித் தேரோட்டம் நடத்த வலியுறுத்தல்

கம்பம் : கம்பராயப் பெருமாள் கோயில் ஆனித் தேரோட்டம் நடத்த ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

கம்பத்தில் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் இளமாறன் தலைமையில் நடந்தது.

மாவட்ட பொதுச் செயலாளர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மகேந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் கம்பம், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரவும், கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலுக்கு அறங்காவலர்கள் விரைவில் நியமனம் செய்யவும், இக் கோயிலின் ஆனித் தேரோட்டத்தை நடத்த வேண்டும்.

கம்பராயப் பெருமாள் கோயில், வேலப்பர் கோயில்களுக்கு சொந்தமான இடங்களை சர்வே செய்து மீட்கவும், கண்ணகி கோயில் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் சிரமமின்றி சென்று வர ஹிந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் திரளாக நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.

Advertisement