பரமக்குடி அருகே பராமரிக்கப்படாத கண்மாய்கள்: விவசாயிகள் கள ஆய்வு

பரமக்குடி : பரமக்குடி அருகே மானாவாரி கண்மாய்களுக்கு பாசன வசதி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
பரமக்குடி தாலுகாவில் தடுத்தலான்கோட்டை, செம்பிலான்குடி, குறிஞ்சாக்குளம், வேப்பங்குளம் ஆகிய நான்கு பொதுப்பணித்துறை கண்மாய்கள் உள்ளது.
இதே போல் உண்டுபத்தி, பீர்க்கன்குறிச்சி, இடையன்குளம் என மூன்று சிறிய கண்மாய்கள் வானம் பார்த்த பூமியாக மானாவாரி கண்மாய்களாக உள்ளது.
இதன் மூலம் 2500 ஏக்கர் பாசன வசதி இருந்தும் அரசு தண்ணீர் கொண்டு வர வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல் உள்ளது.
இதற்காக காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் அர்ஜுனன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மலைச்சாமி, தடுத்தலான்கோட்டை மகேந்திரன், ஓய்வு பெற்ற பி.டி.ஓ., காளிமுத்து, முருகேசன், ஜெயபாண்டி உள்ளிட்ட விவசாயிகள் கள ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து நீர்வளத்துறை மதுரை மண்டல பொறியாளரை சந்தித்து இது போன்ற கண்மாய்களுக்கு நிரந்தர பாசன வசதி செய்து கொடுக்க முறையிட உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும்
-
வனத்துறை சோதனைச்சாவடியில் தானியங்கி பதிவு முறை அமல்; கேரளா வனத்துறை நவீன முயற்சி
-
முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
டில்லியில் சிறுவன் கொலை வழக்கில் பெண் தாதா உட்பட 4 பேர் கைது
-
'மினி டைடல் பார்க்' பணிகள் திருப்பூரில் 2 மாதத்தில் நிறைவு
-
1ம் வகுப்பு மாணவர்களின் டைரி குறிப்பு புத்தகமாகிறது
-
திருப்பதியில் மாடுகள் இறப்பு?