'காட்சி தந்த' சிவன் கோயில் சீரமைக்குமா தொல்லியல் துறை

மேலுார் : இ.மலம்பட்டி ஊராட்சி உடன்பட்டியில் முட்செடிகள் மற்றும் புதர் மண்டிய நிலையில் கருங்கல் கட்டடம் புதையுண்டு கிடந்தது. மக்கள் முட்செடிகளை அகற்றி பார்த்தபோது அது சிவன் கோயில் எனத்தெரிந்தது.

ரஞ்சித் கூறியதாவது: கிராமத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்வதற்கு வசதியாக முட்செடிகளை அகற்றினோம். அதில் நாலடி உயரமுள்ள சிவலிங்கம், ஆவுடை மற்றும் கோயில் முழுவதும் மணலுக்குள் புதைந்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தொல்லியல் துறையினர் நேரில் ஆய்வு செய்து வரலாற்று முக்கியத்துவத்தையும், சிதைந்த சிவன் கோயிலை சீரமைத்தும் மக்கள் வழிபாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

Advertisement