கூடப்பாக்கம் சாலை படுமோசம்

கூடப்பாக்கம்:பூந்தமல்லி ஒன்றியத்தில் கூடப்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் இருந்து கூடப்பாக்கம் ஊராட்சிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.

இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் விபத்தில் சிக்கி வருகின்றனர். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வருவதில் கூட சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement