கோவில் அருகே மலைபோல் குப்பை துர்நாற்றத்தால் பக்தர்கள் அவதி

பூந்தமல்லி:பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் டிரங்க் சாலையில், பழமையான பூரிமரத்தவ முனீஸ்வரர் கோவில் உள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

காட்டுப்பாக்கம் ஊராட்சியில் தினமும் சேகரமாகும் குப்பை கழிவு, கோவிலின் பின்புறம் மதில் சுவற்றையொட்டி கொட்டப்பட்டு வருகிறது. தற்போது குப்பை கழிவு மலை போல் குவிந்துள்ளது.

கோவிலை சுற்றி துர்நாற்றம் வீசுவதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேதனைக்கு உள்ளாகின்றனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், 'கடந்த ஐந்து ஆண்டுகளாக குப்பை கழிவு கோவிலின் பின்புறம் கொட்டப்படுகிறது. காட்டுப்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்தினரிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. குப்பை கழிவை அகற்றி, வேறு இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement