அரசு பஸ் சக்கரம் ஏறி முதியவர் பலி

திருப்புத்துார்: திருவாரூர் மாவட்டம் மூங்கில்குடி கிருஷ்ணமூர்த்தி 70. இவர் பிள்ளையார்பட்டியில் தனியார் மண்டப காவலராக இருந்தார். நேற்று மாலை திருப்புத்தூரில் இருந்து பிள்ளையார்பட்டிக்கு பஸ் ஏற நடந்து சென்றார்.

அப்போது காரைக்குடியில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசு பஸ் பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைந்தது. அப்போது பஸ்சின் முன் சக்கரம் முதியவர் மீது ஏறியது. சிகிச்சை பலனின்றி முதியவர் பலியானார்.

Advertisement