மீட்டர் ரீடிங் எடுக்கும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு

சென்னை : வீடுகளில் மின் பயன்பாட்டை, இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்வாரிய பணியாளர்கள் கணக்கு எடுக்கின்றனர். பணியாளர்கள் பற்றாக்குறையால், ஓய்வுபெற்ற ஊழியர்களையும், இப்பணியில் வாரியம் ஈடுபடுத்தி வருகிறது.

அவர்களுக்கு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், ஒரு மின் இணைப்பு கணக்கெடுக்க நான்கு ரூபாயும், கிராமங்கள், மலைப்பகுதிகளில் கணக்கெடுக்க, ஆறு ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்த தொகையை உயர்த்தி வழங்குமாறு, ஓய்வுபெற்ற பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், ஒரு மின் இணைப்பு கணக்கெடுக்க ஐந்து ரூபாயாகவும், கிராமங்கள், மலைப்பகுதிகளில் ஏழு ரூபாயாகவும் உயர்த்தி, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement