விருசுழியாறு சீரமைப்பு பணி துவக்கம்

திருப்புத்தூர்: கண்டரமாணிக்கம் விருசுழியாற்றில் மாவட்ட நிர்வாகம், தனியார் பங்களிப்புடன் நீர்வளத்துறை, வேளாண் பொறியியல் துறையினர் மேற்கொண்டுள்ள சீரமைப்பு பணியை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.

விருசுழியாற்றில் 43.8 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.52.93 லட்சத்தில் தூர்வாரும் பணிக்கான துவக்க விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார்.

அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். இந்தஆறு சீரமைப்பு பணியால் மழைநீரை கொண்டு 9 அணைக்கட்டு, 4 தடுப்பணைகளுக்கு நீர்வரத்து ஏற்படும். இதனால் 2124 எக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

Advertisement