குட்கா விற்றவர் கைது  

திருபுவனை: மதகடிப்பட்டு அருகே கல்லுாரி மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்ற பெட்டிக் கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

திருபுவனை அடுத்த ஆண்டியார்பாளையம் கிராமத்தை சேர்ந்த பாலசந்திரன், 32; கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார்.

இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.

கடையில் இரண்டு சாக்குப் பைகளில் ரூ.20 ஆயிரம் மதிப்புடைய 9.7 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, பாலச்சந்திரனை கைது செய்தனர்.

Advertisement