விரட்டிய விவசாயிகளை தாக்க வந்த யானை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகம், அய்யூர் காப்புக்காட்டில் ஏராளமான யானைகள் முகாமிட்டுள்ளன. வனத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் இரவு நேரங்களில் புகுந்து யானை கூட்டம் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை யானை, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.

அதனால் விவசாயிகள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, யானையை சத்தம் போட்டும், அதிக ஒளி எழுப்பும் டார்ச்லைட்டுகளை அடித்தும் விரட்டினர். அப்போது திடீரென விவசாயிகள் மற்றும் இளைஞர்களை தாக்க யானை ஓடி வந்தது. இதனால் விவசாயிகள் ஓடி உயிர் தப்பினர். தொடர்ந்து சத்தம் எழுப்பியதால், யானை மீண்டும் வனப்பகுதி நோக்கி சென்றது.

Advertisement