ஈஸ்டர் சிறப்பு திருப்பலி

கிருஷ்ணகிரி: புனித வெள்ளியை அடுத்து, 3வது நாள் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி பூஜை நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி துாய பாத்திமா அன்னை திருத்தலத்தில், ஈஸ்டர் சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது.

திருத்தல பங்குத்தந்தை இசையாஸ், திருப்பலி பூஜையை நிறைவேற்றினார். இதில் முன்னதாக, அடக்கம் செய்த கல்லறையில் இருந்து, 3வது நாள், இயேசு உயிர்த்தெழும் நிகழ்வு, ஒளி வெள்ளத்தில் நடந்தது. இதையடுத்து, இயேசுவை வரவேற்கும் வகையில், கிறிஸ்தவர்கள் அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு திருப்பலியில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், 3,000க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement