கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம், 292 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 126 கன அடியாக சரிந்தது.

அணையிலிருந்து, 12 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 48.45 அடியாக நீர்மட்டம் இருந்தது. மேலும், பாரூர் ஏரி, பாம்பாறு, சின்னாறு அணைகளுக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றது. இதில், பாரூர் ஏரியின் மொத்த உயரமான, 15 அடியில், 7.40 அடியாகவும், நீர்திறப்பு, 55 கன அடியாகவும் உள்ளது. இதே போல், பாம்பாறு அணை மொத்த உயரமான, 19.60 அடியில், 15.71 அடியாகவும், நீர் திறப்பு, 40 கனஅடியாகவும் உள்ளது. சின்னாறு அணை மொத்த உயரமான, 32.80 அடியில், 12.47 அடியாக நீர்மட்டம் இருந்தது.

Advertisement