கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 409.49 கன அடி நீர்வரத்து இருந்தது. கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், நேற்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து, 451.67 கன அடியாக உயர்ந்தது.

அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 363.67 கன அடி நீரும், வலது, இடது கால்வாயில், 88 கன அடியும் என மொத்தம், 451.67 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டது. அணையிலிருந்து நேற்று திறக்கப்பட்ட நீரில், ரசாயனம் அதிகமாக கலந்திருந்ததால், தென்பெண்ணை ஆறு மற்றும் வலது, இடது பாசன கால்வாய்களில், 5வது நாளாக நேற்றும் ரசாயன நுரை அதிகமாக காணப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி, அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41 அடிக்கு நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement