600 கிலோ குட்கா கடத்திய ராஜஸ்தான் வாலிபர் சிக்கினார்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, தொகரப்பள்ளியில், மத்துார் இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த, டில்லி பதிவெண் கொண்ட மாருதி பிரஷா சொகுசு காரை நிறுத்திய போது, காரிலிருந்த இரண்டு பேரில் ஒருவர் தப்பினார்.

மற்றொருவரை போலீசார் பிடித்தனர். சோதனையில், காரில், 40 மூட்டைகளில், 600 கிலோ அளவிற்கு புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் பிடிபட்டவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பரத்குமார், 23, என தெரிந்தது. அவரை கைது செய்து, கார் மற்றும் அதிலிருந்த, 600 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement