ஆந்திர வாலிபருக்கு வெட்டு

புதுச்சேரி: ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராவணய்யா, 37. இவர் புதுச்சேரியில் தங்கி பேட்டரி கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு தாவரவியல் பூங்கா எதிரில் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவர்களிடம் மது வாங்கி தருமாறு கூறியுள்ளார்.

அதற்கு ராவணய்யா மறுக்கவே ஆத்திரமடைந்த அந்த வாலிபர், ராவணய்யாவை கத்தியால் சரமரியாக வெட்டி விட்டு தப்பியோட முயன்றார். தகவலறிந்த ஒதியஞ்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த வாலிபரை மடக்கி பிடித்து, போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். காயம் அடைந்த ராவணய்யாவை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். இது தொடர்பாக ராவணய்யாவுடன் மது குடித்த அவரது நண்பர்கள் நான்கு பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement