'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெறாது'
ஓசூர்: ''அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெறாது,'' என, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதில் கலந்து கொண்ட வேல்முருகன், நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க., - பா.ஜ.,வுடனான கூட்டணியை, தமிழகத்தில் வாழும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள். தி.மு.க., தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி, மிகப்பெரிய வெற்றியை எதிர்வரும் காலங்களிலும் பெறும். அ.தி.மு.க., பா.ஜ.,வுடன் சேர்ந்ததால், அரசியல் ரீதியாக எவ்வித நன்மை கிடைக்கவும் வாய்ப்பில்லை. முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகளுக்காக, பா.ஜ., மற்றும் மத்திய அரசு, தமிழகத்தில் பல்வேறு வேலைகளை செய்கிறது.
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ., போன்ற துறைகளை வைத்து கொண்டு, அ.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகளை மிரட்டி தன்பக்கம் இழுத்து வருகிறார்கள். அன்பால் கட்டுப்பட்டு, கொள்கை, கோட்பாடு, லட்சியம், கருத்து ரீதியாக கூட்டணி அமைத்தால், அது வெற்றியை நோக்கி பயணிக்கும். ஆனால், மிரட்டி பணிய வைக்கும் கூட்டணி, ஒரு காலத்திலும் வெற்றி பெறாது.
தமிழகத்தில் மதத்தின் பெயரால், அரசியல் அறுவடை செய்ய நினைக்கும், பா.ஜ., தலைமையிலான எந்த அணிக்கும் வெற்றி கிடைக்காது. மலம் கலந்த தண்ணீர் குடித்து மூன்று பேர் உயிரிழந்தது தொடர்பாக, சட்டசபையில் கேள்வி எழுப்பி நீதி கேட்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
இந்தியா வந்தார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்: உற்சாக வரவேற்பு
-
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டியது!
-
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி