பணியாளர்களுக்கு அறுசுவை உணவு

அன்னுார் : அன்னுார் பேரூராட்சியில், நிரந்தர, தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில், 120 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, நேற்று முன்தினம் 'ஜீவனுள்ள இயேசுவின் சத்தம்' ஊழியம் சார்பில், ஜெரால்ட் பாபு, தூய்மை பணியாளர்களுக்கு, அறுசுவை உணவு வழங்கினார்.

முன்னாள் கவுன்சிலர் சந்திரசேகரன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து சில ஆண்டுகளாக தூய்மை பணியாளர்களுக்கு ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அறுசுவை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement