குண்டும், குழியுமான சாலையால் அவதி
கரூர்: கரூரில் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கரூர், 80 அடி சாலை பகுதியில் அரசு, தனியார் பள்ளிகள், திருமண மண்டபம், கோவில்கள், மருத்துவ மனைகள், ஜவுளி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் உள்ளன. அந்த வழியாக, பொது மக்கள் டூவீலர், கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும், 80 அடி சாலை வழியாக பெரிய குளத்துப்பாளையம், வெங்கமேடு, சின்ன குளத்துப்பாளையம் பகுதிகளுக்கும், பொதுமக்கள் வாகனங்களில் செல்கின்றனர்.
இந்நிலையில், 80 அடி சாலையில், பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள், தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். இதனால் கரூர், 80 அடி சாலையில், குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை, சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
மேலும்
-
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டியது!
-
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்
-
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் பணிக்கு தோண்டிய பள்ளத்தால் ஆபத்து