கடனை செலுத்தாத தம்பதி மீது வழக்கு

கரூர்: கரூர் மாவட்டம், மண்மங்கலம் காளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம், 40; இவரது மனைவி சசிகலா, 38; இவர்கள் இருவரும் கடந்த, 2024ல் ஜன., மாதம் கரூரில் உள்ள, தனியார் நிதி நிறுவனத்தில் வாகன கடனாக, 46 லட்சத்து, 21,776 ரூபாய் பெற்றுள்ளனர்.

ஆனால், வாகன கடனை கணவனும், மனைவியும் உரிய முறையில் திருப்பி செலுத்தவில்லை. இதுகுறித்து, தனியார் நிதி நிறுவன மேலாளர் வீரமணி, 35, போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, கரூர் டவுன் போலீசார் சண்முக சுந்தரம், அவரது மனைவி சசிகலா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement