14வது மாடியில் இருந்து விழுந்து மூதாட்டி மரணம்
கோவை : கும்பகோணம் மேலக்காவேரியை சேர்ந்தவர் நடராஜன். கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் காவலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சிவமணி, 64. சிவமணி வீட்டிலிருக்கும் போது, மொபைல்போனில் அதிக அளவு வீடியோக்களை பார்ப்பது வழக்கம். எப்போதும் போன் பார்த்தபடி இருந்ததால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. டாக்டர்கள் சிறிது காலம் அவரை, வேறு ஊருக்கு அழைத்துச் சென்று வைத்திருக்க அறிவுறுத்தினர்.
இதையடுத்து கோவை, கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் உள்ள அவரது மகள் வீட்டில் சிவமணி தங்கியிருந்தார். நேற்று முன்தினம், சிவமணி அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்த வீட்டின் பால்கனியில், காய போட்டிருந்த துணிகளை எடுக்கச் சென்றார்.
துணிகளை எடுத்த போது, எதிர்பாராத விதமாக 14வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். கீழே நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் மீது விழுந்த அவர், படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்து 108 ஆம்புலன்ஸ் வந்தது. ஆம்புலன்ஸ் தொழில்நுட்ப ஊழியர் பரிசோதனையில் சிவமணி உயிரிழந்தது தெரிந்தது. கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி
-
சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்
-
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் பணிக்கு தோண்டிய பள்ளத்தால் ஆபத்து
-
கடனை செலுத்தாத தம்பதி மீது வழக்கு