சூறாவளியுடன் மழை பெயர் பலகைகள் சேதம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பகுதிகளில் நேற்று மாலை சூறாவளியுடன் மழை பெய்ததால் கடைகளில் உள்ள பெயர் பலகைகள் விழுந்து சேதமடைந்தன.

அருப்புக்கோட்டை சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை 5.30 மணிக்கு, சூறாவளியுடன் மழை பெய்தது. அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி, வாழ்வாங்கி சேது ராஜபுரம், சிதம்பராபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அருப்புக்கோட்டை வழியாக செல்லும் மதுரை --- தூத்துக்குடி நான்கு வழி சாலை ஓரங்களில் உள்ள பல கடைகளின் முன்பு வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள், பெயர் பலகைகள், வரவேற்பு பலகைகள், மின் விளக்குகள் காற்றில் வளைந்தும், உடைந்து சேதமடைந்தன. கடைகளின் பெயர்பலகைகள் கீழே விழுந்தன.

Advertisement