சிறிய பள்ளிகளை நோக்கி ஆசிரியர்கள். படையெடுப்பு; மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சி

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக, ஆசிரியர்கள் சிறிய பள்ளிகளை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர்.
தமிழகத்தில் மாணவர்கள் நலன் கருதி அரசு சார்பில் கிராமங்கள் தோறும் பள்ளிகள் செயல்படுகின்றன. கடலுார் வருவாய் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு பகுதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் தொடக்க, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் சேர்த்து 2,224 உள்ளன.
மாவட்டத்தில் கடலுார், விருத்தாசலம் என, 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 7 வட்டாரங்கள் உள்ளன.
கடலுார் கல்வி மாவட்டத்தில் மட்டும் 576 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர்.
இதற்கிடையே, ஆண்டுதோறும் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது.
இப்பிரச்னை தமிழகம் முழுதும் உள்ள பள்ளிகளில் உள்ளன. இதை சமன் செய்ய ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி, மாணவர் அறிமுக விழா, விடுமுறை எடுக்காத மாணவருக்கு பரிசு போன்ற முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனர்.
நடப்பு கல்வியாண்டில் பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் பரிசு வழங்குதல், புத்தகம், நோட்டு, சீருடை உள்ளிட்ட பொருட்களையும் இலவசமாக வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி தமிழக அரசு தொடக்கப்பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை தமிழ்வழி கல்வி படித்த மாணவ, மாணவிகளுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்தியுள்ளது.
தொடக்க பள்ளிகளில்தான் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளது என எடுத்துக் கொள்ளக் கூடாது. பெரிய பள்ளிகளிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. கடலுாரில் மாணவர்கள் சேர்க்கைக்கு 'பிகு' காட்டிய பெரிய பள்ளிகள் எல்லாவற்றிலும் மாணவர்கள் சேர்க்கை குறைவு ஏற்பட்டுள்ளது.
இந்த மாதம் 30ம் தேதி வரை ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு முயற்சி செய்ய வேண்டும் என, சென்னை பள்ளி கல்வி இயக்குனர் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதையொட்டி ஆசிரியர்கள், மாணவர் சேர்க்கைக்கு கிராமம் கிராமமாக சென்று வருகின்றனர். கடலுாரில் உள்ள பல தனியார் பள்ளிகள் சில மெட்ரிக் பாடப்பிரிவில் இருந்து சி.பி.எஸ்.இ.,க்கு மாறியுள்ளது.
ஆனால், அவர்களும் மாணவர் சேர்க்கைக்கு முக்கியத்துவம் அளித்து, சிறிய அளவில் செயல்படும் தொடக்கப் பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள், பெற்றோர்களின் மொபைல் போன் எண் வாங்கி வருகின்றனர்.
கடலுாரில் பிளஸ் 2 வரை உள்ள பிரபலமான பள்ளிகள் எல்லாம் மாணவர்கள் சேர்க்கைக்காக சிறிய பள்ளிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
மேலும்
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி
-
சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்
-
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் பணிக்கு தோண்டிய பள்ளத்தால் ஆபத்து
-
கடனை செலுத்தாத தம்பதி மீது வழக்கு