இளையான்குடியில் கோடை வெயில் தாகம் தணிக்க குடிநீருக்காக திண்டாட்டம்
இளையான்குடி: இளையான்குடி பகுதியில் கோடை வெயில் கடுமையாக அடித்து வருவதை தொடர்ந்து தாகத்தை தணிக்க கூட குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதிகளுக்கும்,ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 55 ஊராட்சிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கும் திருச்சியில் இருந்து ராமநாதபுரம் வரை செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 15 வருடங்களுக்கு முன்பு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் கடுமையாக கோடை வெயில் அடித்து வருவதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிற நிலையில் தாகத்தை தணிக்க கூட குடிநீர் இல்லாமல் மிகவும் திண்டாடி வருகின்றனர்.
இது குறித்து இளையான்குடி பகுதி மக்கள் கூறியதாவது, நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மையாக இருப்பதினால் குடிநீர் தேவைக்கும், மற்ற தேவைகளுக்கும் முழுமையாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தையே நம்பி உள்ளோம்.
ஆரம்ப காலத்தில் முறையாக விநியோகம் செய்யப்பட்ட நிலையில் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக இத்திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
மாதத்திற்கு ஒரு முறை கூட குடிநீர் வருவதில் பிரச்னையாக உள்ளது. தற்போது கோடை வெயில் கடுமையாக அடித்து வருவதினால் தாகத்தை தணிக்கக்கூட குடிநீர் கிடைக்காமல் திண்டாடி வருகிறோம்.
தனியார் வண்டிகளில் வரும் குடிநீர் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் இருந்தாலும் அதனை ரூ.15 குடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதனை தவிர்ப்பதற்காக மத்திய அரசு நிதியின் மூலம் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.28 கோடி செலவில் கடந்தாண்டு புதிய குடிநீர் திட்டம் துவங்கப்பட்டது. ஆனால் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது, என்றனர்.
மேலும்
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி
-
சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்
-
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் பணிக்கு தோண்டிய பள்ளத்தால் ஆபத்து
-
கடனை செலுத்தாத தம்பதி மீது வழக்கு