விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

மதுரை: மதுரை தோட்டக்கலை துறை, வோளண்மை கல்லுாரி ஆராய்ச்சி மையம் சார்பில் விவசாயிகளுக்கு 'வெள்ளை ஈ'பாதிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

சமீபத்தில் 'வெள்ளை ஈ'பூச்சிகளின் தாக்குதலால் தென்னை மரங்கள் பெருமளவில் பாதிப்படைந்தன. பூச்சிகள் இலைகளின் அடிபகுதியில் சாறுகளை உறிஞ்சுகின்றன. வெப்பம் அதிகரிக்கும் காலங்களில் அவற்றின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும். இதனை கட்டுப்படுத்த ஒரு கிலோ மைதாவை 5 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து 20 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம் என செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜனரஞ்சனி, உதவி அலுவலர்கள் ஜெகதீஸ் குமார், அபிராமி, முத்துமாரி, கல்பனாதேவி, பூச்சியியல் துறை சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். மேற்கு வட்டாரத்தில் 600 எக்டேர் பரப்பில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது.

Advertisement