குட்டூர் அண்ணாமலையார் கோயிலில் வருடாபிஷேகம்

நத்தம்: நத்தம் குட்டூரில் உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோயிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்து முடிந்த நிலையில் நேற்று காலையில் வருடாபிஷேக விழா நடந்தது.

இதையொட்டி கோயில் வளாகத்தில் சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டு சிவச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க அனுக்கை, விக்னேஷ்வரபூஜை, பூர்ணாகுதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. மூலவர் அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், இளநீர், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் மணிமாறன், விழாகுழுவினர் செய்திருந்தனர்.

Advertisement