குப்பைத்தொட்டியான சங்கிலிப்பள்ளம் ஓடை

திருப்பூர் : திருப்பூரில் ஆடை உற்பத்தித்துறை சார்ந்த பல நிறுவனங்கள், உற்பத்தியின் போது வெளியேறும் கழிவுகளை முறையாக அப்புறப் படுத்துவதில்லை. நொய்யலாறு, சங்கிலிப்பள்ளம், ஜம்மனை ஓடை என அருகிலுள்ள நீர் நிலைகள், குப்பை தொட்டிகளில் கொட்டுகின்றனர்.
திருப்பூர்- பல்லடம் ரோடு, தமிழ்நாடு தியேட்டர் முதல் கருப்பகவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில், சங்கிலிப்பள்ளம் ஓடையை, அப்பகுதி நிறுவனங்கள் குப்பைத்தொட்டியாக மாற்றிவிட்டன.
ஓடையை ஒட்டிய பகுதி களில், சாயங்கள் வைக்கப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், எம்ப்ராய்டரி போம் கழிவு, கட்டிங் வேஸ்ட் மற்றும் சாய ஆலைகளில் வெளியேறும் சாம்பல் கழிவு, சுத்திகரிப்பு மைய திடக்கழிவு உள்பட பல்வேறுவகை கழிவுகளை வாகனங்களில் கொண்டுவந்து கொட்டிச் செல்கின்றனர். சுற்றுச்சூழல் மாசு படுகிறது.
மாநகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை, மாசுகட்டுப்பாடு வாரியம் இணைந்து, நீர் நிலைகளில் கழிவுகளை கொட்டிச்செல்வோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.