புகார் பெட்டி - கள்ளக்குறிச்சி
குறுகலான சாலைகளால் சிக்கல்
கள்ளக்குறிச்சியில் தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ள சேலம்-சென்னை பிரதான சாலைகள் மிகவும் குறுகலானதாக இருப்பதால் வாகனங்கள் எளிதில் இயக்க முடியாத நிலையில் உள்ளது.
சுரேஷ்பாபு கண்ணன், கள்ளக்குறிச்சி
பயணிகள் குழப்பம்
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில், குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தாமல் வழிப்பாதையை ஆக்கிரமித்து குறுக்கும் நெடுக்குமாக பஸ்களை நிறுத்துவதால், எந்தெந்த ஊருக்கான பஸ் எங்கு நிற்கிறது என தெரியாமல் பயணிகள் தவிக்கின்றனர்.
பாலசுப்ரமணியன், கள்ளக்குறிச்சி
வாகனங்களால் நெரிசல்
கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட் அருகில் உள்ள அம்மா உணவகம் முன்பாக, வாகனங்களை வரிசையாக நிறுத்துவதால் அங்கு செல்வது சிரமமாக உள்ளது.
கலைமணி, கள்ளக்குறிச்சி
பஸ் வசதி தேவை
கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரி மற்றும் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு செல்ல, போதிய பஸ்கள் இல்லாததால் கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோக்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
சுந்தரபாண்டியன், கள்ளக்குறிச்சி
மாவட்ட நுாலகம் ஏற்படுத்தப்படுமா?
கள்ளக்குறிச்சியில் அரசு நுாலகம் போதிய அடிப்படை வசதி இல்லாமல் இருப்பதுடன், இதுவரை மாவட்ட நுாலகமும் ஏற்படுத்தப்படாமல் உள்ளதால், வாசகர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ரவிச்சந்திரன், கள்ளக்குறிச்சி