மகளிடம் அத்துமீறிய காமுகன் 'போக்சோ'வில் கைது
திட்டக்குடி : திட்டக்குடி அருகே கிராமத்தை சேர்ந்தவர் 35 வயது நபர். இவருக்கு 13 வயது மகள் உள்ளார்.
சிறுமிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாததால், அவரது தாய், நேற்று முன்தினம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதுகுறித்து திட்டக்குடி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுமியின் கர்ப்பத்திற்கு அவரது தந்தையே காரணம் எனத் தெரிந்தது.
உடன், போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, தந்தையை கைது செய்து, விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement