கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது

கரூர்: கரூரில் கஞ்சா வைத்திருந்ததாக, இரண்டு பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் எஸ்.ஐ.,க்கள் சிவகாமி, அறிவழகன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் மணல்மேடு பஸ் ஸ்டாப், சின்னமநாயக்கன்பட்டி பிரிவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கஞ்சா வைத்திருந்த, தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்த போகர் பிரதாப், 27, ரங்கநாதன், 26, ஆகியோரை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Advertisement