சாக்கடை கழிவுநீர் தேக்கம் மணவாசி பஞ்.,ல் சீர்கேடு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மணவாசி பஞ்சாயத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தடையின்றி செல்ல சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாக்கடை கால்வாய் வழியாக, கழிவு நீர் மற்றும் மழைக்காலங்களில் மழைநீர் வடிந்து வந்தது.

தற்போது, சாக்கடையை முறையாக துார்வாராததால் ஆங்காங்கே அடைத்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் தொடர்ந்து செல்ல வழியின்றி வழிந்து சாலையில் பாய்ந்து வருகிறது. இதனால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்க, சாக்கடை கால்வாயை முறையாக துார்வார வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement