காவிரி, அமராவதி கரையோரத்தில் தனியார் போர்வெல்கள்: முறைப்படுத்த எதிர்பார்ப்பு
கரூர்: காவிரி, அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில், தனியார் நிலங்களில் போர்வெல் மூலம் தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதை, முறைப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.
கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்தது. மேலும், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் பெய்த மழையால், காவிரி, அமராவதி, பவானிசாகர் ஆறுகளில், கடந்த ஆகஸ்ட் மாதம், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, நீரை சேமித்து வைக்க போதிய கட்டமைப்பு வசதி இல்லாததால், உபரி நீர் கடலில் கலந்தது. நடப்பாண்டு கடந்த, நான்கு மாதங்களில் சராசரி மழையளவை விட, அதிகளவில் மழை பெய்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள, இரண்டு நகராட்சிகள், 10 டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் 157 கிராம பஞ்சாயத்துகளுக்கு, காவிரி, அமராவதி, நங்காஞ்சி ஆறுகளில் அமைக்கப்பட்டுள்ள, கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. அதில், காவிரியாற்றில் மட்டும் குடிநீருக்காக திறக்கப்பட்ட, 1,000 அடி தண்ணீர் ஓடுகிறது. மற்ற, இரண்டு ஆறுகளும் வறண்ட நிலையில் உள்ளது.
இந்நிலையில், காவிரி, அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில், தனியார் நிலங்களில் போர்வெல் அமைத்து, ராட்சத மின் மோட்டார்கள் மூலம், தண்ணீரை உறிஞ்சி லாரிகள் மூலம், தண்ணீர் விற்பனை ஜோராக நடக்கிறது. அதை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், கூட்டு குடிநீர் திட்ட கிணறுகள், விவசாய கிணறுகளில் தண்ணீர் வற்றும் நிலை உள்ளது. இதுகுறித்து,
விவசாயிகள் கூறியதாவது: மேட்டூர் அணையில் இருந்து, குடிநீருக்காக மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதை வைத்து, குடிநீர் மற்றும் பயிர்களுக்கு, உயிர் தண்ணீராக பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். திறக்கப்படும் தண்ணீரால், விவசாய கிணறுகளின் நீர்மட்டம் உயரும். ஆனால், காவிரி, அமராவதி ஆற்று கரையோர பகுதிகளில் வட்ட கிணறுகள், தனியார் நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்கள் மூலம் தண்ணீர் திருடப்படுகிறது.
அதை தவிர, நேரிடையாக காவிரியாற்றில் மின் மோட்டார் மூலம் தண்ணீரை விற்பனைக்காக எடுத்து செல்கின்றனர். இதனால், தனியார் நிலங்களில், அமைக்கப்பட்டுள்ள போர்வெல்களை வரைமுறைப்படுத்த வேண்டும். கோடைகாலம் முடியும் வரை, விதிமுறைகளை மீறி காவிரி, அமராவதி ஆற்றுப்பகுதியில் உள்ள, தனியார் போர்வெல் குழாய்களை அப்புறப்படுத்த
வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி
-
சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்
-
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் பணிக்கு தோண்டிய பள்ளத்தால் ஆபத்து