கோடை மழையால் எலுமிச்சை விலை குறைவு
கரூர்: கோடை மழை காரணமாக, வரத்து அதிகரிப்பால் எலுமிச்சை விலை குறைந்தது.
கடந்த மார்ச் மற்றும் நடப்பு மாத துவக்கத்தில் கோடைகாலம் என்பதால், உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் எலுமிச்சை, ஒரு கிலோ, 140 ரூபாய் வரை விற்றது. இந்நிலையில், நடப்பு மாதம், சில நாட்களாக மாநிலம் முழுவதும் கோடை மழை பெய்ய துவங்கியது. இதனால், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் எலுமிச்சை பழம் உற்பத்தி அதிகரித்தது.
இதையடுத்து, கரூர் உழவர் சந்தை, காமராஜர் தினசரி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் மார்க்கெட்டுக்கு எலுமிச்சை வரத்து அதிகரித்தது. இதனால், நேற்று ஒரு கிலோ எலுமிச்சை, 125 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை விற்றது.
இதுகுறித்து, எலுமிச்சை வியாபாரிகள் கூறுகையில், 'திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரத்தில் இருந்து, எலுமிச்சை பழம் வரத்து அதிகரித்துள்ள நிலையில், கோடை மழைக்காலம் துவங்கியுள்ளதால் பயன்பாடு குறைந்துள்ளது. இதனால், எலுமிச்சை பழத்தின் விலையும் குறைந்து வருகிறது' என்றனர்.
மேலும்
-
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டியது!
-
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி
-
சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்