சாத்விக்-சிராக் ஜோடி விலகல்: சுதிர்மன் கோப்பை பாட்மின்டனில்

புதுடில்லி: சுதர்மன் கோப்பை பாட்மின்டனில் இருந்து காயம் காரணமாக இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி விலகியது.

சீனாவில், வரும் ஏப். 27 - மே 4ல் அணிகளுக்கு இடையிலான சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடர் நடக்க உள்ளது. இந்திய அணி 'டி' பிரிவில் டென்மார்க், இங்கிலாந்து, இந்தோனேஷியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதற்கான இந்திய அணியில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி இடம் பெற்றிருந்தது. கடந்த மாதம் பர்மிங்காமில் நடந்த ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் 2வது சுற்றில் சிராக் ஷெட்டியின் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதிலிருந்து முழுமையாக குணமடையாத காரணத்தினால், சுதிர்மன் கோப்பையில் இருந்து சாத்விக், சிராக் ஜோடி விலகியது. இதனையடுத்து ஆண்கள் இரட்டையரில், போதிய அனுபவம் இல்லாத ஹரிகரன், ரூபன் குமார் ஜோடி களமிறங்க உள்ளது.
ஏற்கனவே பெண்கள் இரட்டையர் பிரிவில் இருந்து காயம் காரணமாக காயத்ரி கோபிசந்த், திரிசா ஜோடி விலகியது.

Advertisement