இளைஞருக்கு பழனிசாமி மோதிரம் பரிசு

சென்னை : அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:

கடந்த 16ம் தேதி, சென்னை அரும்பாக்கம் பகுதியில் தேங்கி நின்ற மழைநீரில், மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. அவ்வழியாக வந்த ரேகன் என்ற 8 வயது சிறுவன், தண்ணீரில் காலை வைத்தவுடன் மின்சாரம் தாக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே வந்த, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தஞ்சாவூர் ஒரத்தநாடைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் உடனடியாக அச்சிறுவனை காப்பாற்றினார்.

தன் உயிரை துச்சமென மதித்து, அச்சிறுவனை காப்பாற்றிய இளைஞர் கண்ணனை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பாராட்டி, அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement