பழுதடைந்த உயரழுத்த மின்கம்பங்கள் பனையடிவாக்கத்தில் விபத்து அபாயம்

சூணாம்பேடு, பனையடிவாக்கத்தில், குடியிருப்புகளுக்கு நடுவே செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் பழுதடைந்து, சாய்ந்துள்ளன. இதனால், இப்பகுதியில் விபத்து அபாயம் நீடிக்கிறது.
சூணாம்பேடு அடுத்த கல்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பனையடிவாக்கம் புதிய காலனியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
நுகும்பல் துணை மின் பகிர்வு மனையில் இருந்து கடப்பாக்கம் பகுதிக்கு, 11 'கே.வி.,' திறன் கொண்ட உயரழுத்த மின்சாரம் கொண்டு செல்ல, புதிய காலனி பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள ஐந்து மின்கம்பங்கள், கடந்த ஏழு ஆண்டுகளாக பழுதடைந்து, சிமென்ட் பூச்சு உதிர்ந்த நிலையில் உள்ளன. இவற்றில் உள்ள இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன.
பலத்த காற்று வீசினால் மின்கம்பம் முறிந்து, குடியிருப்புகள் மீது சாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும், தற்போது வரை மின்கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்து ஏற்படும் நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்
-
கிராம உடையில் 'போட்டோ சூட்' ஜோடிக்கு குவியும் பாராட்டு
-
பெங்களூரில் இரண்டு இடங்களில் விபத்து கராத்தே பயிற்சியாளர் உட்பட 2 பேர் பலி
-
இறந்ததாக மூதாட்டி ரேஷன் கார்டு ரத்து அதிகாரிகள் மீது நடவடிக்கைக்கு உத்தரவு
-
மின்கம்பி அறுந்து விழுந்து இரு சக்கர வாகன ஓட்டி பலி
-
பழுதடைந்து நிற்கும் பி.எம்.டி.சி., பஸ்கள் அதிகாரிகள், பொதுமக்களுக்கு தலைவலி
-
ஒரு சமூகத்தின் முதல்வர் விஜயேந்திரா கடும் தாக்கு