வருவாய் கோட்டங்களில் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
செங்கல்பட்டு,செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்களில் இன்று, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டங்களை வருவாய் கோட்ட அளவில் நடத்த கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, செங்கல்பட்டு சப் - கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், சப்- கலெக்டர் மாலதி ஹெலன் தலைமையில், இன்று 10:30 மணிக்கு நடக்கிறது.
இதேபோன்று, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், பிற்பகல் 2:30 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று, தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன் பெறலாம்.
இதேபோல், மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், வரும் 25ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது. இதில், விவசாயிகள் பங்கேற்று, கோரிக்கை மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.
மேலும்
-
போலீசாருக்கு 'பிட்னஸ்' எஸ்.எஸ்.பி., உத்தரவு
-
அரியாங்குப்பம் 14 பஞ்சாயத்துக்களில் மே 1ம் தேதி கிராம சபை கூட்டம்
-
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தேர்தல் அதிகாரிகள் பெருமிதம்
-
காரை ஏற்றி பவுன்சரை கொலை செய்ய முயற்சி தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது
-
விறகு அடுப்பில் சமைத்து மகிளா காங்.,போராட்டம்
-
பெண்ணிடம் 5 சவரன் நகை நுாதன மோசடி :வாலிபருக்கு வலை