மாணவர்களுக்கு விருந்து; பள்ளி ஆசிரியர் தாராளம்

1

பனமரத்துப்பட்டி : சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 98 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

கல்வியாண்டின் இறுதி வேலை நாளான கடந்த 17ல், பள்ளியின் ஆசிரியர் தெய்வநாயகம், மாணவ - மாணவியருக்கு விருந்து மற்றும் பரிசுகள் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

வாழை இலையில் வெஜிடபிள் பிரியாணி, கேசரி, பழங்கள் வைத்து விருந்து கொடுத்தார். பள்ளியில் மாணவ - மாணவியர் மகிழ்வுடன் சாப்பிட்டனர். அடுத்த ஆண்டு, ஆறாம் வகுப்பு செல்ல இருக்கும், ஐந்தாம் வகுப்பை சேர்ந்த 28 மாணவ - மாணவியருக்கு பேனா, பென்சில், தேர்வு அட்டை உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கினார்.

இதுகுறித்து, ஆசிரியர் தெய்வநாயகம் கூறுகையில், “தொடக்கப் பள்ளியில் இருந்து மனநிறைவுடன் மாணவ - மாணவியர் வீட்டிற்கு செல்வதற்கு, பள்ளியின் சீதனமாக பரிசுகள் வழங்கப்பட்டன. கல்வியை தொடர்ந்து கற்க, ஊக்கம் அளிக்கும் விதமாக விருந்து மற்றும் பரிசு வழங்கப்பட்டன. இது போல, 17 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறேன்,” என்றார்.

Advertisement