திறந்த 2 நாளில் விழுந்தது தரமற்ற பயணியர் நிழற்கூடம்

வேலுார்: வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சீவூர் பஞ்., உட்பட்ட சித்துார் கேட் பகுதியில், வேலுார் லோக்சபா தொகுதி, தி.மு.க., - எம்.பி., கதிர்ஆனந்த் நிதியிலிருந்து, 11 லட்சம் ரூபாய் செலவில் புதிய பயணியர் நிழற்கூடம் கட்டி முடிக்கப்பட்டது.

புதிய நிழற்கூடத்தை, தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்த் கடந்த 19ம் தேதி திறந்து வைத்தார். அந்த நிழற்கூடத்தின் கூரை பூச்சு நேற்று இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பில்லை. நிழற்கூடம் தரமற்று கட்டி முடிக்கப்பட்டு உள்ளதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

Advertisement