அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரை பறித்த பயங்கரவாதிகள் இவர்கள்தான்!

1

ஸ்ரீநகர்: காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அடில் ஹூசேன் தோக்கர், அலி பாய், ஹஷிம் மூசா ஆகிய மூவரை பற்றி தகவல் தெரிவித்தால் தலா ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்தனர்.


@1brஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடத்திய பங்கரவாதிகளை பிடிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, காஷ்மீரில் பல்வேறு இடங்களில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகின்றனர்.


சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அடில் ஹூசேன் தோக்கர், அலி பாய், ஹஷிம் மூசா ஆகிய 3 பேர் குறித்து தகவல் தெரிவித்தால் தலா ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்தனர்.


நேற்றைய தினம் பஹல்காம் தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகள் பெயர் குறிப்பிடாமல் தகவல் அளிப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் என காஷ்மீர் போலீசார் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தனர்.

Advertisement