பாக்., நடிகர் நடித்த பாலிவுட் படத்திற்கு தடை: மத்திய அரசு முடிவு

புதுடில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள பாகிஸ்தானை சேர்ந்த நடிகர் நடித்த பாலிவுட் படத்திற்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த நடிகர் பாவத் கான் நடிப்பில் ' அபிர் குலாய்' என்ற ஹிந்திப்படம் தயாராகி உள்ளது. விவேக் அகர்வால் தயாரித்த இந்த படத்தை ஆர்த்தி எஸ் பகதி என்பவர் இயக்கி உள்ளார். வாணி கபூரும் இந்த படத்தில் நடித்து உள்ள இப்படம் மே 9 ம் தேதி திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால், இந்தியா பாகிஸ்தான் இடையில் உள்ள உறவு மோசமாக உள்ள காரணத்தினால், இப்படத்தை வெளியிடுவதற்கு மஹாராஷ்டிராவில் ராஜ் தாக்கரேயின் நவநிர்மான் சேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.
தற்போது, பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். நாட்டு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திய இச்சம்பவம் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் உள்ளனர். இதனால், அந்நாட்டு நடிகர் பாவத் கான் நடிப்பில் தயாராகி உள்ள படத்தை புறக்கணிக்க வேண்டும் என மேற்கு இந்திய சினிமா கூட்டமைப்பு சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் வலியுறுத்த துவங்கி உள்ளன.
இதனையடுத்து இப்படத்தை வெளியிடுவதில் சினிமா அரங்குகள் தயக்கம் காட்டி வருகின்றன. பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழ்நிலையில், இந்த படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.








மேலும்
-
மருத்துவhttps://admin.dinamalar.com/newsadd_xml2.php?MID=102&xmlid=2170131மனையில் இருந்து குதித்து மேற்குவங்க வாலிபர் தற்கொலை
-
திருச்சி விமான நிலையத்தில் அமெரிக்க டாலர்கள் பறிமுதல்
-
தூய்மை பணியாளருக்கான உபகரணங்கள் வருகை
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி தமிழக எல்லையில் தீவிர வாகன சோதனை
-
முதியவரிடம் ரூ.29,000 பறிப்பு
-
கலெக்டர் அலுவலக வளாகத்தில் சாலை விழிப்புணர்வு பூங்கா