வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவர் கைது

சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஜமுனாராவ் சாஹப், 79. கடந்த, 8 ம் தேதி அன்று தங்கை வீட்டிற்கு சென்றார். பின், 11ம் தேதி காலை வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 2.5 சவரன் நகை, வெள்ளிப் பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.

மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து, திருட்டில் ஈடுபட்ட கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ், 49, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 2.5 சவரன் நகை, 233 கிராம் எடையுள்ள வெள்ளிப் பொருட்கள் மீட்கப்பட்டன.

கைதான சுரேஷ் மீது ஏற்கனவே, திருட்டு, வழிப்பறி, கஞ்சா உட்பட, 24 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது.

Advertisement