பிரீமியர் லீக் : 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி

சென்னை: பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
சென்னையில் நடக்கும் பிரிமீயர் லீக் தொடரின் 43-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். இதனையடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரர் சயிக் ரஷீத் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாம் கரண் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார்.ஆயுஸ் மத்ரே (30)மற்றும் ரவீந்திர ஜடேஜா (21) ஓரளவு விளையாடி ரன்களை சேர்த்தனர்.
சென்னை அணியில் அதிகபட்சமாக டிவால்ட் பிராவிஸ் 42 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ஷிவம் துபே 12, தீபக் ஹூடா22, தோனி 6, அன்ஷூல் கம்போஜ் மற்றும் நூர் அகமது 2 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள்.
இதனால், சென்னை அணி 19.5 ஓவரில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
ஐதராபாத் அணியின் ஹர்ஷல் படேல் 4, பாட் கம்மின்ஸ், உனக்த் கட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
155 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணியில் .அபிஷேக் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். டிராவிஸ் ஹெட் 19 ரன்களிலும், க்ளாசன் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 44 ரன்களிலும் , அனிகேத் வர்மா 19 ரன்களிலும் அவுட்டாகினர்.
கமிந்து 32 ரன்களிலும், ரெட்டி 19 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் 18.04 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்த ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நூர் அஹமது 2 விக்கெட்டுகளை வீழத்தினார்.
