பாக்.கிற்கு அவர்கள் புரியும் மொழியில் பாடம் எடுங்கள்; திரிணமுல் எம்.பி., அபிஷேக் பானர்ஜி வலியுறுத்தல்

கோல்கட்டா: எங்களுக்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக் தேவையில்லை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுங்கள், அவர்களுக்கு புரியும் மொழியில் பாடம் எடுங்கள் என்று பிரதமரை திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.



இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலை தள பதிவில் கூறி உள்ளதாவது;


கடந்த சில நாட்களாக ஊடகங்கள், மத்திய அரசின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் செயல்பாடுகளை கவனித்து வருகிறேன். பஹல்காமில் நிகழ்த்த பயங்கரவாத தாக்குதலுக்கு வழிவகுத்த தவறுகளை ஆழமாக ஆராய்வதற்கு பதில், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு நன்மை பயக்கும் வகையில் அவர்கள் அதிக கவனம் செலுத்தி செயல்படுவதாக தெரிகிறது.


இதுபோன்ற அற்ப அரசியலுக்கு அப்பாற்பட்டு, இந்த பிரச்னையை தீர்க்கமாக அணுகி தீர்வு காண வேண்டிய தருணம் இது.


பாகிஸ்தானுக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக்குக்கான தருணம் இதுவல்ல. அவர்களுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்க வேண்டிய தருணம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுக்க வேண்டிய காலம்.


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement