கட்டுப்பாட்டை இழந்த வேன் கிணற்றில் விழுந்து விபத்து: ம.பி.,யில் 10 பேர் உயிரிழந்த சோகம்

போபால்: ம.பி.,யில் சுற்றுலா சென்ற வேன்,கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர்.
மத்திய பிரதேசம் மாநிலம் மாண்ட்சௌர் மாவட்டம், நாராயண்கர் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட கச்சாரிய கிராமத்தில் இன்று 14 பேருடன் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள திறந்த வெளி கிணற்றில் விழுந்தது.
தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது:
பக்தர்களை ஏற்றிச்சென்ற சென்ற வேன், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து புத்த- தகர்வாட் கடவை அருகே சாலையை விட்டு விலகி, ஒரு பைக் மீது மோதி, திறந்த வெளி கிணற்றில் விழுந்தது.
இந்த விபத்தில் உள்ளூர் மீட்புப் பணியாளர் உள்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்து உள்ளனர், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.
துரதிர்ஷ்டவசமாக, சிக்கியவர்களை மீட்க கிணற்றில் இறங்கிய உள்ளூர்வாசி மனோகர் சிங் என்பவர் விஷ வாயு தாக்கியதில் உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மந்த்சௌர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ நடந்த இடத்திற்கு வந்த துணை முதல்வர் ஜகதீஷ் தேவ்தா, தனது வருத்தத்தைத் தெரிவித்து, மீட்புப் பணிகளுக்கான வழிகாட்டுதலை வழங்கினார்.





மேலும்
-
கத்தியை காட்டி அச்சுறுத்தல் ரவுடிகள் கைது
-
203 கட்டுமான திட்டங்களுக்கு நான்கு மாதங்களில் ஒப்புதல்
-
சித்திரை பிரம்மோத்சவம் தேர் பராமரிப்பு தீவிரம்
-
யுத்த வர்ம போர்கலை அணி சிலம்ப போட்டியில் சாம்பியன்
-
கோடை வெப்பம் சமாளிக்க முடியாததால் ஆரணி ஆற்றில் ஆட்டம் போடும் இளசுகள்
-
'கூகுள் பே'யில் அனுப்புவதாக ரூ.6,000 அபேஸ்