இந்தியாவுக்கே முன்னோடியான தமிழகத்தின் வளர்ச்சி; உதயநிதி பெருமிதம்

4

கோவை: கோவையில் ரூ.10 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானம் அமைப்பதற்கான அடிக்கல்லை துணை முதல்வர் உதயநிதி நாட்டினார்.

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்த துணை முதல்வர் உதயநிதி ரோடு ஷோ நடத்தினார். அவருக்கு தி.மு.க., தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

தொடர்ந்து, கோவை ஆர்.எஸ்.,புரத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான ஹாக்கி விளையாட்டு மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார். ரூ.239.41 கோடி மதிப்பில் 25,024 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; கோவைக்கு எப்போது வந்தாலும் புத்துணர்ச்சி கிடைக்கும். எல்லோருக்கும் எல்லாமும் என்பது தான் திராவிட மாடல் அரசு. மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. நாட்டுக்கே முன்னோடியாக தமிழகத்தின் வளர்ச்சி 9.6ஆக இருக்கிறது, எனக் கூறினார்.

Advertisement