மருத்துவ மாணவரிடம் மோசடி

வேலுார்; வேலுார் தனியார் மருத்துவ கல்லுாரியில், முதுகலை மருத்துவம் படிக்கும், 27 வயது மாணவரின் மொபைல்போனுக்கு, 'ஆன்லைனில்' பகுதிநேர வேலை என்றும், 15,000 ரூபாய் முதலீடு செய்தால், 28,000 ரூபாய் சம்பாதிக்கலாம் என்றும் குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதை நம்பி, தன் விபரம், வங்கி கணக்கு விபரங்களை, அவர்கள் அனுப்பிய லிங்க்கில் பதிவு செய்துள்ளார்.

‍மறுமுனையில் தொடர்ந்து பேசி, மாணவரை நம்ப வைத்து, பல தவணைகளில், 11.50 லட்சம் ரூபாயை பெற்று மோசடி செய்துள்ளனர். புகாரில் வேலுார் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement