பால் வியாபாரிக்கு வெட்டு: 5 பேரிடம் விசாரணை
கம்பம் : தேனி மாவட்டம் கம்பம் அரசு டாஸ்மாக் மதுக்கடை அருகே நேற்று முன்தினம் இரவு பால் வியாபாரி சுதாகரை 29, ஐந்து பேர் கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. சிசி டிவி கேமராவில் பதிவான காட்சிகளின்படி ஐந்து பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கம்பம் கெஞ்சையன்குளத்தைச் சேர்ந்த பால் வியாபாரி சுதாகர்.
இவர் நேற்று முன்தினம் இரவு ஏகலுாத்து ரோட்டில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றார். கடை அருகே அமர்ந்திருத்த சுதாகரை அங்கு வந்த ஐந்து பேர் கும்பல் அரிவாளால் வெட்டியது.
சுதாகரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒடி வந்ததால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. படுகாயமடைந்த சுதாகரை பொது மக்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் சுதாகர் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கம்பம் தெற்கு போலீசார் டாஸ்மாக் மதுக்கடையில் உள்ள சிசி டிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மின்வாரிய அலுவலகம் தெருவைச் சேர்ந்த சூர்யா 30, சந்திரன் 28, தினேஷ் 27, அஜித் 29, லலித் 28, ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
அடுத்த தலாய் லாமா யார்; ஜூலையில் அறிவிக்க வாய்ப்பு; உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு
-
எல்லையில் தொடரும் துப்பாக்கிச் சண்டை; அத்துமீறும் பாக்., ராணுவத்துக்கு இந்தியா தக்க பதிலடி
-
வீரன் பாப்பாத்தி அம்மன் திருவிழா
-
தொ.மு.ச., கவுன்சில் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
-
குளவி கொட்டி சிறுவன் சாவு
-
தவறி விழுந்த தொழிலாளி சாவு