மஞ்சள்விளாகம் சாலை கடும் சேதம் சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை

கூவத்துார்:மஞ்சள்விளாகம் கிராமத்தில், காசிபாட்டை சாலை கடும் சேதமடைந்து உள்ளதால், கிராமத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர்.
கூவத்துார் அருகே பரமன்கேணி ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சள்விளாகம் கிராமத்தில், கிழக்கு கடற்கரை சாலையில் குடியிருப்பு பகுதிக்குச் செல்லும், வரலாற்று சிறப்புமிக்க காசிபாட்டை சாலை உள்ளது.
பண்டைய காலத்தில் வாழ்ந்த பக்தர்கள், சாதுக்கள் மற்றும் துறவிகள், காசி முதல் ராமேஸ்வரம் வரை பாத யாத்திரை செல்ல, இந்த சாலையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், இந்த சாலைக்கு காசிபாட்டை சாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க காசிபாட்டை சாலை, மஞ்சள்விளாகம் பகுதியில் முற்றிலும் சேதமடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சேதமடைந்து உள்ளது.
தினமும் இந்த சாலையில் நடந்து செல்வோர், பைக், கார் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள இந்த காசிபாட்டை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; அமெரிக்கா, பிரான்சில் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம்
-
அடுத்த தலாய் லாமா யார்; ஜூலையில் அறிவிக்க வாய்ப்பு; உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு
-
எல்லையில் தொடரும் துப்பாக்கிச் சண்டை; அத்துமீறும் பாக்., ராணுவத்துக்கு இந்தியா தக்க பதிலடி
-
வீரன் பாப்பாத்தி அம்மன் திருவிழா
-
தொ.மு.ச., கவுன்சில் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
-
குளவி கொட்டி சிறுவன் சாவு